இளம் பெண்ணை ஏமாற்றிவிட்டு திருமணம் செய்ய மறுத்த பேராசிரியரை குண்டுக்கட்டாக தூக்கிய காவல்துறை
திருச்சி அருகே இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துவிட்டு வரதட்சனை கேட்டு திருமணம் செய்ய மறுத்ததோடு இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பேராசிரியர் கைது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், அய்யன் கோட்டையைச் சேர்ந்தவர் சுப்புராமன். இவரது மகள் கார்த்திகாயினி (வயது 32). எம்.இ பட்டதாரியான இவருக்கு மேட்ரிமோனியில் வரன் பார்த்து உள்ளனர். அதேபோல் திருவெறும்பூர் வடக்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் ரமேஷ் (38). இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் ராமநாதபுரம் கிளையில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் ரமேஷும் மேட்ரிமோனி மூலம் வரன் பார்த்துள்ளார். அப்படி வரன் பார்க்கும் பொழுது இருவருக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்போழுது கார்த்திகாயினி மத்திய அரசு பணியில் வேலை பார்த்து வருவதாக கூறியுள்ளார். இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்து 6 மாதம் பழகியதாக கூறப்படுகிறது. அப்போது சென்னை எக்மோர் பகுதியில் அறை எடுத்து தங்கி இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
புதுக்கோட்டையில் விறுவிறுப்பாக நடைபெற்ற நுங்கு வண்டி பந்தயம்; தங்க காசை தட்டிச்சென்ற சிறுவர்கள்
இந்த நிலையில் கார்த்திகாயினி மத்திய அரசு பணியில் இல்லை கார்த்தியாகினி கூறியது பொய் என ரமேஷுக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் கார்த்திகாயினி ரமேஷை திருமணம் செய்து கொள்ள கேட்ட போது ரமேஷ் அதற்கு மறுத்ததோடு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் 100 சவரன் நகை, கார் வேண்டும் என கூறியுள்ளார். இல்லையென்றால் தன்னை திருமணம் செய்து கொள்ள உனக்கு தகுதி இல்லை எனக்கு கூறி தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து கார்த்திகாயினி சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் ரமேஷ் மீது இரண்டு முறை புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரமேஷின் நண்பர் ரமேஷிடம் எதற்காக இருவரும் வழக்கு போட்டு கொள்கிறீர்கள் சமரசம் பேசி வழக்கை முடித்துக் கொள்ள வேண்டியதுதானே எனக்கு கூறி சமரசம் பேசுவதற்காக கடந்த 13ம் தேதி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் உள்ள ரமேஷ் வீட்டிற்கு அழைத்துள்ளார். அதன் அடிப்படையில் கார்த்திகாயினியும் வந்ததாகவும், அப்பொழுது சமரசம் பேசும் பொழுது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
பொது தேர்வில் குறைந்த மதிப்பெண்; அம்மாவுக்கு கடிதம் எழுதிவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை
வாக்குவாதத்தின் போது கார்த்திகாயினியை ரமேஷ் தாக்கியதோடு என்னை திருமணம் செய்து கொள்ள உனக்கு தகுதி இல்லை என கூறி ரமேஷ் கொலை மிரட்டல் விடுத்ததாக கார்த்திகாயினி திருச்சி எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் திருச்சி எஸ்பி அலுவலகத்தில் இருந்து இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி திருவெறும்பூர் காவல் துறையினரை அறிவுறுத்தி உள்ளனர்.
புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததோடு ரமேஷை கைது செய்து திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.