சாலையோரம் இடம் பிடிப்பதில் போட்டி; மத்திய அரசு ஊழியர் கல்லால் அடித்துக் கொலை

திருச்சியில் சாலையோரம் உள்ள கடை வராண்டாவில் இடம் பிடிப்பதில் ஏற்பட்ட போட்டியில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கட்டிடத் தொழிலாளியை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

competition for roadside space retired Central government worker stoned to death in trichy

திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி(60). மத்திய அரசு நிறுவனமான திருச்சி ஆல் இந்திய ரேடியோ நிலையத்தில் தோட்டத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப பணி ஓய்வு பெற்று மனைவியுடன் வசித்து வந்த நிலையில் திடீரென அவரது மனைவி இறந்து விடவே சிறிது காலம் திருமணமான மகளின் வீட்டில் தங்கியிருந்தார்.

சண்டைக்கு தயாராக இருந்த 5 சேவல்கள் கைது; புதுவை போலீஸ் அதிரடி

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகளின் வீட்டிலிருந்து வெளியேறிய கந்தசாமி ஸ்ரீரங்கம் கிழக்கு சித்திரை வீதி பகுதியில் கோவில்களில் அன்னதானம் வாங்கி சாப்பிட்டு விட்டு கடை வராண்டாவில் படுத்து உரங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதே கடை வரண்டாவில் வேறு சிலரும் இரவு படுத்து தூங்குவார்கள். 

இந்நிலையில் இங்குள்ள கடை வராண்டாவில் படுத்து தூங்க ஈரோடு மாவட்டம், பவானி பகுதியைச் சேர்ந்த முருகேசன் (39) என்பவர் கட்டிட வேலைக்கு சென்று விட்டு வந்தார். அப்போது இடம் பிடிப்பதில் நேற்று நள்ளிரவு கந்தசாமிக்கும், முருகேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த முருகேசன் அங்கு கிடந்த சிமெண்ட் கான்கிரீட் கல்லை தூக்கி கந்தசாமியின் தலையில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. 

Video: பேய் விரட்டுவதாகக் கூறி பெண்களை முரத்தால் நையப்புடைத்த சாமியார்

இதில் மண்டை உடைந்து இரத்த வெள்ளத்தில் கந்தசாமி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் முருகேசன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்று கந்தசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.

பின்னர் தப்பி ஓடிய முருகேசனை கைது செய்தனர். விசாரணையில் கடை வராண்டாவில் இடம் பிடிப்பதில் ஏற்பட்ட போட்டியின்  காரணமாக கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios