திருச்சி மலைக்கோட்டை கோவில் அலுவலகத்தில் துப்புறவு பணியாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம், லால்குடி அன்பில் வடக்கு தெரு, மங்கம்மாபுரத்தைச் சேர்ந்தவர் ஜெகன்(வயது 28). திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். 7வருடம் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்த அவர் கடந்த 1வருடம் முன்பு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு கோவில் அலுவலகத்தில் வழக்கம் போல் தனது பணிகளை செய்ததாகக் கூறப்படுகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் இன்று அதிகாலை கோவில் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் கோவிலுக்கு சென்ற போது அலுவலகத்தில் ஜெகன் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கரைல இருந்த மண்ண அள்ளிட்டு பொயிட்டாங்க; வேலை ரொம்ப மந்தம் - அமைச்சரிடம் கொந்தளித்த மக்கள்

தொடர்ந்து ஜெகன் தற்கொலை குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூய்மை பணியாளராக பணியாற்றிய ஜெகன் தற்கொலை அடுத்து கோவில் நடை சாத்தப்பட்டது. தொடர்ந்து பரிகார பூஜைக்கு பின்னர் 12 மணி அளவில் கோவில் திறக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D