திருச்சியில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வழக்கறிஞரும், அவரது மகனும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். 

திருச்சி மாவட்டம் துவாக்குடி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜராஜசோழன். இவர் திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் செயலாளர் ஆவார். இவருக்கு 2 மகன்கள் இருந்தனர். இந்நிலையில், நேற்று இரவு மகன் சேரலாதனை (12) டியூசனில் இருந்து அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் ராஜராஜசோழன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். 

அப்போது, சாலையோரம் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. இதை கவனிக்காமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார். இதனால் எதிர்பாராத விதமாக, லாரியின் பின்புறம் புல்லட் பயங்கரமாக மோதியது. இதில் ராஜராஜசோழனும், அவரது மகனும் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். 

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இருவரையும் அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.