கழிவறையில் இடம்பெற்ற மீசை முறுக்கிய பாரதி படம்..? பொங்கியெழுந்த மக்கள்..!
ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் திருச்சியில் அமைக்கப்பட்ட ஆண்களுக்கான கழிவறையில் மகாகவி பாரதியாரின் பாதி முகம் போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட அபிஷேகபுரத்தில் கோட்ட அலுவலகம் இருக்கிறது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருச்சியில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இங்கிருக்கும் கோட்ட அலுவலகத்தின் எதிரே ஸ்மார்ட் டாய்லெட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்திய அளவிலும் தமிழகத்திலும் முதன்முதலாக ஸ்மார்ட் டாய்லெட் அமைக்கப்பட்டுள்ளது. ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை தானாகவே சுத்தம் வகையில் சென்சார்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் டாய்லெட்டில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இதை தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் திறந்து வைத்திருந்தனர்.
இந்தநிலையில் இக்கழிவறையின் ஆண்கள் பகுதியில் மகாகவி பாரதியாரை போன்று மீசை முறுக்கி பாதி முகம் ஒன்று இடம்பெற்றிருந்தது. இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவவே பெரும் சர்ச்சை உண்டாகியது. பலர் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆனால் அதுகுறித்து விளக்கமளித்த மாநகராட்சி நிர்வாகம், அது பாரதியார் படம் இல்லை என்றது. எனினும் தொடர்ந்து எதிர்ப்பு நீடித்து வந்த நிலையில் தற்போது அந்த படம் நீக்கப்பட்டிருக்கிறது.
12 வயது சிறுமியிடம் அத்துமீறிய கிழவன்..! போக்சோவில் அதிரடி கைது..!