மணப்பாறை அருகே அரசுப் பேருந்து - கார் மோதி விபத்து: 5 பேர் பலி, 20 பேர் படுகாயம்
மணப்பாறை அருகே உள்ள கல்கொத்தனூரில் திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து கார் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
திருச்சியில் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த அரசுப் பேருந்தில் 25 பேருக்கு மேல் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், பேருந்து மணப்பாறை அருகே உள்ள கல்கொத்தனூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது விபத்து நடந்திருக்கிறது என்று தெரியவருகிறது.
மூட நம்பிக்கையை உடைக்கும் சித்தராமையா! சட்டப்பேரவையில் வாஸ்துவால் அடைக்கப்பட்ட கதவுகள் திறப்பு!
எதிரே வேகமாக வந்த கார் அரசுப் பேருந்தின் மீது மோதியுள்ளது. அரசுப் பேருந்து ஓட்டுநர் பேருந்து காருடன் மோதுவதைத் தவிர்க்க முயற்சி செய்துள்ளார். ஆனால், அதற்குள் கார் வந்த வேகத்தில் பேருந்து மீது மோதி நசுங்கியது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரப் பள்ளத்தில் பாய்ந்துவிட்டது.
இந்த பயங்கர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். அவர்கள் அனைவரும் காரில் பயணித்தவர்கள் என்று முதல் கட்டத் தகவலில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சுமார் 20 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசுப் பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
500 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மூடல்; கடை முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்