திருச்சியில் கொத்து கொத்தாக கொண்டு வரப்பட்ட 2 கிலோ தங்கம், ரூ.15 லட்சம் பறிமுதல் - ரயில் நிலையத்தில் அதிரடி

திருச்சி ரயில் நிலையத்தில் பயணியிடம் நடத்தப்பட்ட சோதனையில் 2 கிலோ தங்கம், 15 லட்சம் ரொக்கத்தை ரயில்வே போலிசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2 crore worth jewellery seized by police officers in trichy railway station vel

தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம் தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்ல முக்கிய மாவட்டமாக இருப்பதால் திருச்சி ரயில்வே கோட்டம் முக்கியமான ரயில் நிலையமாக இருந்து வருகிறது. திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை போன்ற பல்வேறு இடங்களுக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் மீண்டும் கள்ளச்சாராயம்? விக்கிரவாண்டியில் சாராயம் குடித்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதி

இந்த நிலையில் திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமல்லாது ஏராளமான மக்கள் திருச்சி ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை மூத்த கோட்ட ஆணையர் டாக்டர் அபிஷேக், உதவி கோட்ட ஆணையர் பிரமோத்நாயர், ஆய்வாளர் செபாஸ்டின் தலைமையிலான போலீசார்   திருச்சி ரயில்வே சந்திப்பில் வழக்கம் போல் பயணிகள் உடைமைகளை சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விக்கிவாண்டியில் வாக்குச்சாவடி மையத்தில் பெண்ணுக்கு கத்தி குத்து; போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

அதன்படி இன்று காலை சென்னையில் இருந்து திருச்சி வந்த மங்களூர் விரைவு ரயிலில் வந்த மதுரையைச் சேர்ந்த லட்சுமணன் (வயது 26) என்பவர் மாஸ்க் அணிந்து சற்று வித்தியாசமாக நடந்து வந்துள்ளார். அவர் மீது சந்தேகம் அடைந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் லட்சுமனனின்  பையை சோதனை செய்தனர். அதில்  1 கோடியே 89 லட்சத்து 622 ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ 795.90 கிராம் தங்கம் மற்றும் 500 ரூபாய் கட்டு கட்டுகளாக  15 லட்சம் ரொக்க பணத்தை கைப்பற்றினர். 

தொடர்ந்து வணிகவரித்துறை அதிகாரிகள் ஜங்சன் ரயில் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது அவர்கள் வைத்திருந்தது போலி ஆவணங்கள் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து லட்சுமணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios