முதல்வர் ஸ்டாலினின் செயல் திட்ட அறிவிப்புக்காக இந்தியாவே காத்துகிடக்கிறது - அமைச்சர் சிவசங்கர் பேச்சு

தமிழக முதல்வர் ஸ்டாலின் என்ன செயல் திட்டம் அறிவிக்கிறார் என்பது குறித்து இந்தியாவே எதிர்பார்த்து காத்திருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

whole india awaits for cm mk stalin's action plan announcement says minister ss sivasankar vel

திருவாரூரில் தொமுச மாவட்ட தலைவர் வைத்தியநாதன் மறைவை யொட்டி அவரது படத்திறப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு 5 நிமிடங்களுக்கு ஒரு பேருந்தும், தாம்பரத்துக்கு இரண்டு நிமிடத்திற்கு ஒரு பேருந்தும், கிண்டிக்கு மூன்று நிமிடத்துக்கு ஒரு பேருந்தும் இயக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் ஆம்னி பேருந்துகள் இயக்கம் தொடங்கிய நிலையில் அதன் மூலம் வந்த 20 ஆயிரம் பேரில் 9800 பேரை  இலவசமாக கோயம்பேடு வரை மாநகரப் பேருந்துகளை பயன்படுத்தி அழைத்துச் சென்றுள்ளோம். இது தவிர ஆட்டோ மற்றும் டாக்சி முன்பதிவு செய்து கொண்டு செல்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மிகச் சிறப்பாக செயல்படுகின்ற இந்த அரசின் மீது ஏதேனும் குறை சொல்கின்ற நோக்கில் தனி நபர்கள் விமர்சிக்கிறார்கள் அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை.

போட்டி தேர்வுகளுக்கான தமிழக அரசின் இலவச பயிற்சி வகுப்பில் சேர அரிய வாய்ப்பு

வரும் பிப்ரவரி 7ஆம் தேதி அன்று தொழிற்சங்கத்தினருடன் நடைபெற உள்ள பேச்சு வார்த்தையில் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். திமுக பாரம்பரியமான இயக்கம் அதனை பேரறிஞர் அண்ணா, கருணாநிதி போன்றோர் மாற்று சித்தாந்தமாக திராவிட சித்தாந்தத்தின் மூலம் வளர்த்தெடுத்தனர். அவர்களது வழியில் திராவிட மாடல் ஆட்சியை ஸ்டாலின் நடத்தி வருகிறார். எதிர்கால நம்பிக்கையாக உதயநிதி திகழ்கிறார். இந்த நிலையில் இந்தியா முழுவதும் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்ன செயல் திட்டத்தை அறிவிக்க போகிறார் என காத்திருக்கிறார்கள். எனவே திமுகவை பொருத்தவரை தொடர்ச்சியாக மக்களுக்காக பாடுபடும் இயக்கமாக திகழும் என தெரிவித்தார்.

28 பதக்கம் வாங்கிய தமிழகத்திற்கு 20 கோடி, 1 பதக்கம் கூட பெறாத குஜராத்திற்கு 200 கோடியா? அமைச்சர் பெரியசாமி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios