Asianet News TamilAsianet News Tamil

ரேஷன் கடையில் ஒரு குடும்பத்திற்கு 2 குடம் தண்ணீர்… வறட்சியில் வத்திப்போகும் கிராமங்கள்!!

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ரேஷன் முறையில் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. 
 

water sales in Ration for thiruvannamalai people
Author
Chennai, First Published Jul 14, 2019, 5:22 PM IST

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ரேஷன் முறையில் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. 

ரேஷன்ல அரிசி, பருப்பு விற்கிற போல தற்போது  தண்ணீரையும் ரேஷன் முறையில கிராமங்களில் கொடுக்க ஆரம்பிச்சாட்டாங்க.  பருவமழை மழை பொழியாததால், தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதிலும் திருவண்ணாமலை மாவட்டம் கடுமையான வறட்சியால் வற்றிப்போயுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள துரிஞ்சாபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட வேடந்தவாடி கிராமத்தில் சுமார் 1,200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராமத்திற்கு நீர் ஆதாரமாக இருந்த திறந்தவெளி கிணறு, முற்றிலும் வற்றிவிட்டது. இதனால், அங்குள்ள ஏரிப்பகுதியில் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் கொண்டுவந்து மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இரவு நேரங்களிலும் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீரை மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் நிரப்பும் டேங்க் ஆபரேட்டர்கள், அதிகாலை 4 மணி முதல் கிராம மக்களுக்கு விநியோகிக்கின்றனர். அதிலும், வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு 2 குடம் வீதம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. 1 வீட்டிற்கு 1 நபர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால், பெற்றோரும், பள்ளி செல்லும் குழந்தைகளும் வரிசையில் நின்று தண்ணீரை பிடித்துச் செல்கின்றனர். ஒரு சிலருக்கு தண்ணீர் கிடைக்காத சூழலே இருப்பதாக பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.  

Follow Us:
Download App:
  • android
  • ios