திருவண்ணாமலையை திணறடிக்கும் கொரோனா... 3 நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடு உயர்வு..!
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59- ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59- ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், டவுன் பஞ்சாயத்துகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆனாலும், கடந்த சில தினங்களாக நோய்த் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் கொரோனா பாதிப்பில் ஆரஞ்சு மண்டலத்திலிருந்து திருவண்ணாமலை மாவட்டம் தற்போது சிவப்பு மண்டலத்துக்கு மாறியது.
இந்நிலையில், சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து ஏப்ரல் மாத இறுதியிலும், மே மாத தொடக்கத்திலும் கூட்டம் கூட்டமாக திருவண்ணாமலைக்கு வந்தவர்களே இதற்குக் காரணம் அப்படி வந்தவர்களே பள்ளி, கல்லூரி, திருமண மண்டபம் என 18க்கும் அதிகமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, செய்யாறு பகுதியில் உள்ளவர்களின் சளி மாதிரி சென்னைக்கும், திருவண்ணாமலையில் இருப்பவரகளின் மாதிரிகள் விழுப்புரத்துக்கும் அனுப்பி சோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் நேற்று முன்தினம் 8 பேருக்கும், நேற்று 9 பேருக்கும், இன்று 17 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின்எண்ணிக்கை 59ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து. பாதிக்கப்பட்டவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.