எகிறும் பாதிப்புகளால் திணறும் திருவண்ணாமலை... ஒரே நாளில் 23 பேர் பாதிப்பு..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

tiruvannamalai corona affected case 23 people

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

கொரோனாவின் கோரப்பிடியில் தமிழகம் சிக்கி தவித்து வருகிறது. கடந்த சில நாட்களே கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் சராசரியாக 500-ஐ தாண்டிய வண்ணம் உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,718ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் அதிகபட்சமாக 4,882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

tiruvannamalai corona affected case 23 people

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், டவுன் பஞ்சாயத்துகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆனாலும், கடந்த சில தினங்களாக நோய்த் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் கொரோனா பாதிப்பில் ஆரஞ்சு மண்டலத்திலிருந்து திருவண்ணாமலை மாவட்டம் தற்போது சிவப்பு மண்டலத்துக்கு மாறியது. ஏற்கனவே திருவண்ணாமலையில் 105 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். 

tiruvannamalai corona affected case 23 people

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் புதியதாக மேலும் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 128ஆக உயர்ந்துள்ளது. இதில், கீழ்பெண்ணாத்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் 11 பேரும், செய்யாறு, வந்தவாசி சுற்றுவட்டாரத்தில் 12 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சமூக பரவல் அடைந்துவிட்டதா என்பது குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்ய சென்னை, கோவை, திருவண்ணாமலை மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios