கொரோனா பீதி... மலையில் பதுங்கியிருந்த சீன நாட்டை சேர்ந்தவர் கைது..? திருவண்ணாமலையில் பரபரப்பு..!

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாகவும், அக்னி ஸ்தலமாகவும் திருவண்ணாமலை இருந்து வருகிறது. இங்கு சிறப்பு மிக்க கோவில்கள், ஆசரமங்கள் இருப்பதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இங்கே தங்கியிருந்த வெளிநாட்டினரில் சிலர் கொரோனா நோய்த்தொற்று தீவிரம் அடைவதற்கு முன்பாகவே தங்களது  சொந்த நாடுகளுக்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர். அதன்பேரில், அரசு அனுமதியுடன் இரண்டு நாட்களுக்கு முன் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். 

tiruvannamalai Chinese national arrested in ambush

திருவண்ணாமலையில்  தீபமலையில் 10 நாட்களாக பதுங்கியிருந்த  சீன நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரை தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாகவும், அக்னி ஸ்தலமாகவும் திருவண்ணாமலை இருந்து வருகிறது. இங்கு சிறப்பு மிக்க கோவில்கள், ஆசரமங்கள் இருப்பதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இங்கே தங்கியிருந்த வெளிநாட்டினரில் சிலர் கொரோனா நோய்த்தொற்று தீவிரம் அடைவதற்கு முன்பாகவே தங்களது  சொந்த நாடுகளுக்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர். அதன்பேரில், அரசு அனுமதியுடன் இரண்டு நாட்களுக்கு முன் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். 

tiruvannamalai Chinese national arrested in ambush

இந்நிலையில், திருவண்ணாமலை தீபமலை மீது செல்வதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் தங்கி உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் மாலை மலை மீது சென்று அதிரடி சோதனை செய்தபோது சுந்தாஸ்ரமம் அருகே தங்கியிருந்த 35 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை போலீசார் கீழே அழைத்து வந்தனர்.

tiruvannamalai Chinese national arrested in ambush

இதனையடுத்து, அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் சீனாவின் தலைநகரான பீஜிங்கை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. கொரோனா அச்சுறுத்தலுக்கு முன்பே திருவண்ணாமலைக்கு சுற்றுலா வந்து தங்கியிருந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் கடந்த 25ஆம் தேதி முதல் மலை மீது ஏறிச்சென்று அங்கேயே கடந்த 10 நாட்களாக தங்கியதும் தெரிந்தது. இதனையடுத்து, அவர் சீனாவை சேர்ந்தவர் என்பதால் கொரோனா பாதிப்பு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலையில் சீனாவை சேர்ந்தவர் மறைந்திருந்த சம்பவம் அப்பகுதியில்பரபரப்பை ஏற்படுத்தியது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios