திருவண்ணாமலையில் கையை மீறிப்போகும் கொரோனா... ஒரே நாளில் பாதிப்பு புதிய உச்சம்..!
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,617ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,617ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விருதுநகர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுவரை தமிழகத்தில் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,20,716 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 3,320 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மேலும் 265 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,617 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து 3893 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனையில் 1,432 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 51ஆக உள்ளது.
அதேபோல், விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 517 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,819 ஆக உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 63ஆக உள்ளது.