திருவண்ணாமலையில் கார்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

திருவண்னாமலையில் அய்யம்பாளையம் பகுதிக்கு அருகே கர்நாடகாவுக்கு கார் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இதில் 2 பெண் உட்பட 5 பேர் பயணம் செய்தனர். அப்போது செங்கம் நோக்கி சென்றுக்கொண்டிருந்த சரக்கு லாரியும், காரும் நேருக்கு நேராக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த 5 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.