VIDEO | நீச்சல் தெரியாமல் கிணற்றில் குதித்தவர் பலி! பேஸ்புக்கில் லைக் வாங்க நினைத்ததால் விபரீதம்!
பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் லைக் வாங்க நினைத்து, கிணற்றில் குதித்த நபர் நீச்சல் தெரியாமல் உயிரிழந்த சம்பவம் கரிப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.
பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் லைக் வாங்க நினைத்து, கிணற்றில் குதித்த நபர் நீச்சல் தெரியாமல் உயிரிழந்த சம்பவம் கரிப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் மேற்பட்ட அடுத்த கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர் சென்னையில் கட்டிடம் மேசராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சச்சின் மற்றும் சரண் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். தனியார் மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சரண் தனது நண்பர் ரமேஷ் ஆகிய இருவரும் சரணின் சொந்த ஊரான கரிப்பூருக்கு வந்துள்ளனர்.
சரண் தனது விவசாய நிலத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் குதிப்பதை போல் வீடியோ எடுத்து இணையதளத்தில் போட்டால் லைக்குகள் அதிகமாக கிடைக்கும் என்று கூறி தனது நண்பர் ரமேஷிடம் செல்போனில் படம் எடுக்குமாறு கூறி கிணற்றில் குதித்துள்ளார். நீச்சல் தெரியாத காரணத்தினால் கிணற்றில் குதித்த சரண் மூச்சுத் திணறி தண்ணீரில் மூழ்கியுள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரமேஷ் 100 நாள் வேலையில் ஈடுபட்டிருந்த கிராம மக்களிடம் தகவல் கூறியுள்ளார். மேலும் தீயணைப்பு துறையினருக்கு கிராம மக்கள் அறிவித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஆறு மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு இறந்த சரணின் உடலை மீட்டனர்.
VIDEO | சிசிடிவி-யில் சிக்கிய கோர விபத்து! இருசக்கர வாகனங்கள் மோதல்! தூக்கிவிசப்பட்டு 2பேர் பலி!
இது குறித்து சேத்துப்பட்டு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சரணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனை மருத்துவக்கு அனுப்பி வைத்தனர். பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் லைக்குகள் பெற கிணற்றில் குதித்து உயிரை விட்ட சம்பவம் அப்போதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.