Asianet News TamilAsianet News Tamil

திருவண்ணாமலையில் பள்ளி மாணவிக்கு முகத்தில் கூடு வைத்த தலைமை ஆசிரியர்

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மணிமங்களம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மாணவியின் முகத்தில் தீ வைத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 

The headmaster slapped a school girl in the face in Tiruvannamalai
Author
First Published Dec 23, 2022, 2:40 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மணிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிது. இந்த பள்ளியில் உஷாராணி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் என மொத்தமே 2 பணியாளர்கள் தான் உண்டு என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இப்பள்ளியில் கெடாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த கௌதமி என்ற சிறுமி 4ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

கீதாஜீவன் வீட்டை முற்றுகையிட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது

இந்நிலையில் உஷா ராணி வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த போது மாணவி கௌதமி பாடத்தை கவனிக்காமல் அருகில் இருந்த சக மாணவர்களுடன் பேசிக் கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உஷா ராணி மாணவியை மிரட்டுவதற்காக அருகில் இருந்த தீப்பெட்டியை பற்ற வைத்து இனி இதுபோல் பேசிக் கொண்டு இருந்தால் சூடு வைத்து விடுவேன் என்று மாணவின் முகம் அருகே வைத்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதில் தீக்குச்சியில் இருந்த நெருப்பு மாணவியின் முகத்தில் எதிர்பாராத விதமாக பட்டுள்ளது.

வேலியே பயிறை மேய்வதா? கோவையில் டிவி திருடிய போலீசை கண்டு மக்கள் அச்சம்

இதனைத் தொடர்ந்து மாணவி அழுதுகொண்டே வீட்டிற்குச் சென்று பள்ளியில் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விளக்கம் கேட்ட பெற்றோருக்கு தலைமை ஆசிரியை முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், கிராம மக்களை சேர்த்துக் கொண்டு மங்களம் காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியை மீது புகார் அளித்துள்ளார். மேலும் இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios