Asianet News TamilAsianet News Tamil

பெற்றோருக்கு பாத பூஜை செய்து மாணவ, மாணவிகள்; உணர்ச்சியில் பொங்கி அழுத பெற்றோர்

திருவண்ணாமலையில் கல்லூரி விழாவில் பங்கேற்ற பெற்றோருக்கு மாணவ, மாணவியர் பதங்களை கழுவி மரியாதை செலுத்தினர்.

students wash their parents legs at college event in tiruvannamalai vel
Author
First Published Dec 2, 2023, 11:19 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோவிலூர், வேட்டவலம், கண்டாச்சிபுரம், மரக்காணம், திண்டிவனம், விழப்புரம், செங்கம் ஆகிய ஊர்களில் அன்னை சமுதாய கல்லூரி இயங்கி வருகிறது. செவிலியர் மற்றும் ஓட்டல் நிர்வாகம் குறித்த பாட வகுப்புகள் இங்கு நடத்தப்பட்டு வருகின்றன.

இக்கல்லூரியின் 13ம் ஆண்டு விழா, பெற்றோர்களுக்கு பாதபூஜை நடத்துதல், பட்டயச் சான்றிதழ் வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா திருவண்ணாமலை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவை தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து 350 மாணவ-மாணவியர்களுக்கு பட்டயச் சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது, இங்கு படித்தவர்கள் பலர் அப்பல்லோ போன்ற பெரிய மருத்துவமனைகளில் பணியாற்றி வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது.

தருமபுரியில் கல்லூரி மாணவர் மர்ம மரணம்; உறவினர்களின் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

இந்தியாவிலேயே உயர்கல்வி படித்தவர்களில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. இதற்குக் காரணம் பட்டப்படிப்பு படிக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 போன்ற பெண்களுக்காக பல திட்டங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் நடைமுறைபடுத்தியது தான். இதன் காரணமாக கல்வியில் முதலிடத்தை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருக்கிறது. மருத்துவத் துறையில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்தியாவிலேயே 75 சதவீத மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. வெளிநாட்டினர் சிகிச்சை பெறுவதற்காக தமிழகத்தை நோக்கி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றால் அதற்கு பணியாளர்கள் அவசியம். அந்த பணியாளர்களை அன்னை சமுதாய கல்லூரி உருவாக்கி தருவது பாராட்டுக்குரியது என்றார்.

முன்னதாக நடிகர் தாமு கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இதைத் தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவ-மாணவியர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடையவும், பல்வேறு நலன்களை பெறவும் தங்களது பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்தனர். இது காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios