ஸ்பீக்கர் பாக்ஸ் விழுந்து 3 மாத குழந்தை துடிதுடித்து பலி... திருவண்ணாமலையில் சோகம்..!
திருவண்ணாமலையில் ஸ்பீக்கர் பாக்ஸ் தவறி விழுந்ததில் 3 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையில் ஸ்பீக்கர் பாக்ஸ் தவறி விழுந்ததில் 3 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் பிச்சானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (28). கூலித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பரணி. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன், பிறந்து மூன்று மாதமே பெண் குழந்தையும் இருந்தது. இந்நிலையில், விஜய் அந்த பெண் குழந்தையை வீட்டின் தரையில் படுக்க வைத்திருந்தார். அப்போது வீட்டின் பரணில் இருந்த ஸ்பீக்கர் பாக்ஸ் எதிர்பாரதவிதமாக தரையில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் தலையில் விழுந்துள்ளது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் செய்வதறியாமல் பரணி கூச்சலிட்டார். சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து குழந்தையை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.