கிரிவலப் பாதையில் உள்ள கோயில் நுழைவு வாயிலில் அமர்ந்து மது அருந்திய சாமியார்.. அதிர்ச்சியில் பக்தர்கள்.!
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோயில். இங்குள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
திருவண்ணாமலை கற்பக விநாயகர் கோயிலின் நுழைவு வாயிலில் அமர்ந்து சாமியார் ஒருவர் மது அருந்தும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோயில். இங்குள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஒவ்வொரு மாத பவுர்ணமி அன்றும் இங்குள்ள மலையை பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரையாக சென்று கிரிவலம் செல்கிறார்கள்.
அதோடு, கிரிவலம் செல்லும் பாதையில் நிறைய ஆசிரமங்கள் இருக்கின்றன. அந்த ஆசிரமங்களுக்கும் வெளிநாட்டவர் நிறைய பேர் வந்து தங்குகிறார்கள். குறிப்பாக ஆயிரக்கணக்கான துறவிகள் குடில்கள் அமைத்து, ஆசிரமங்களில் தரும் உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்து வருகின்றனர். அதேநேரத்தில் கிரிவலப் பாதையில் பல இடங்களில் கஞ்சா, சாராயம் உள்ளிட்ட போதைப்பொருள் பயன்பாடுகள் அதிகரித்துள்ளது. பகல் நேரங்களில் யாசகம் பெறும் சாமியார்கள், இரவு நேரங்களில் கஞ்சா, சாராயம் மற்றும் மதுபானங்களை வாங்கி வந்து அருந்துவது சகஜமாக மாறியுள்ளது.
இந்நிலையில், 2 நாள்களுக்கு முன் கிரிவலப்பாதையில் உள்ள கற்பக விநாயகர் திருக்கோயில் வாசல் படியில் அமர்ந்து சாமியார் ஒருவர் மதுபானம் அருந்தும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.