Tiruvannamalai Girivalam பொதுமக்களுக்கு குட்நியூஸ்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு திருவண்ணாமலை கிரிவலத்திற்கு அனுமதி
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பக்தர்களின் கிரிவலத்துக்கு மாநில அரசு தடை விதித்திருந்தது. அதன்படி கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கிரிவலம் செல்லவும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல கடந்த 2 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கிரிவலத்திற்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அனுமதி அளித்துள்ளார்.
திருவண்ணாமலை கிரிவலம்
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோயில். இங்குள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஒவ்வொரு மாத பவுர்ணமி அன்றும் இங்குள்ள மலையை பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரையாக சென்று கிரிவலம் செல்கிறார்கள். அன்றை தினம் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலமாக காட்சி அளிக்கும். விடுமுறை தினத்திலும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்லுவார்கள்.
இதையும் படிங்க;- Travel: பர்வதமலையில் மறைக்கப்பட்ட மர்மங்கள்..திகிலாக ஒரு வழி பாதை..நாய்கள் உருவில் துணையாய் வரும் சித்தர்கள்!
கொரோனா பரவல்
இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பக்தர்களின் கிரிவலத்துக்கு மாநில அரசு தடை விதித்திருந்தது. அதன்படி கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கிரிவலம் செல்லவும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது, கொரோனா தொற்று குறைந்து விட்டதால், மத்திய மாநில அரசுகள், பொதுமுடக்கம் மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கி உள்ளது. ஆனால், முக்கவசம் இன்னும் சில மாதங்கள் அணிவது நல்லது என்று அறிவுறுத்தி உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழிபாட்டுத்தலங்களிலும் எந்தவித கட்டுப்பாடுமின்றி பொதுமக்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அனுமதி
இந்நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பின் திருவண்ணாமலை கோயிலில் கிரிவலத்திற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். பக்தர்கள் சமூக இடைவெளி, முகக்கவசம் ஆகியவற்றை கடைபிடித்து பாதுகாப்புடன் கிரிவலம் செல்ல வேண்டும் என ஆட்சியர் முருகேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- Tiruvannamalai: அண்ணாமலையார் கோயிலுக்கு செல்வோர் கவனத்திற்கு.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தி.மலை ஆட்சியர்..!