Omicron: அதிர்ச்சி.. மகளை தொடர்ந்து தந்தைக்கும் ஒமிக்ரான்.. தொடர்பில் இருந்த 150 பேர் தீவிர கண்காணிப்பில்.!
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் பாதிப்பு இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்த 38 வயது பெண், தனது கணவர் மற்றும் மகனுடன், காங்கோ நாட்டில் இருந்து சென்னைக்கு கடந்த 12ம் தேதி வந்துள்ளார்.
ஆரணியில் ஒமிக்ரான் பாதிப்புக்குள்ளான வசித்த பகுதியில் உள்ள வீடுகளில் வசிக்கும் 150 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் பாதிப்பு இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்த 38 வயது பெண், தனது கணவர் மற்றும் மகனுடன், காங்கோ நாட்டில் இருந்து சென்னைக்கு கடந்த 12-ம் தேதி வந்துள்ளார். அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் 3 பேரும், பையூர் கிராமத்துக்கு வந்துள்ளனர்.
இதனையடுத்து, கடந்த 15ம் தேதி அந்த பெண்ணிற்கு ஒமிக்ரான் அறிகுறி இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஒமிக்ரான் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என சுமார் 150 பேருக்கு கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அப்பெண்ணின் 65 வயது உள்ள தந்தை மற்றும் 35 வயது உள்ள தம்பிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதில், அவரது தந்தைக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதில், தொற்று பாதித்த பெண்ணின் தம்பி, மனைவி தனது கைக்குழந்தையுடன் ஆற்காடு அடுத்த தாஜ்புரா கணபதி நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அங்கு சுகாதாரத்துறை சார்பில் அவர்கள் வீட்டில் உள்ள 6 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், முதல் மற்றும் 2ம் கட்ட பரிசோதனையில் அனைவருக்கும் நெகட்டிவ் என முடிவு வந்தது. தொடர்ந்து3ம் ட்ட பரிசோதனையில் 3 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த 3 பெண்கள் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஆற்காடு அடுத்த தாஜ்புரா கணபதி நகரில் அவர்களது வீடு உள்ள பகுதிகளில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது.
ஒமிக்ரான் பாதிப்புக்குள்ளான வசித்த பகுதியில் உள்ள வீடுகளில் வசிக்கும் 150 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களை சுகாதார குழுவினர் கண்காணித்து வருகின்றனர். பரிசோதனை முடிவில் மேலும் யாருக்கும் பாதிப்பு உள்ளதா? என்பது தெரியவரும்.