9 ஆண்டுகளுக்கு முன் மாயமான சிறுமியை மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைத்த அதிகாரிகள்
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிறுமி கண்டுபிடிக்கப்பட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முன்பு பெற்றோரிடம் ஒப்படைப்பு.
திருவண்ணாமலை மாவட்டம் நல்லூர் கிராமத்தில் உள்ள இருளர் காலணியில் கடந்த 9 வருடங்களுக்கு முன் பெற்றோருடன் வசித்து வந்த சிறுமி திடீரென மாயமானார். அவரை எங்கு சென்று தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அவர்களது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். கடந்த 17.03. 2020 அன்று இளைஞர் நீதி சட்டம் 2015 கீழ் பதிவு பெறாமல் செயல்பட்ட இல்லத்தில் தங்கி இருந்த சிறுமி மல்லி என்கிற பிரியா மீட்கப்பட்டார்.
அவர் குழந்தைகள் நலக் குழு முன்பு ஆஜர் படுத்தப்பட்ட பின்னர் சிறுமியின் பாதுகாப்பு கருதி அல்லாபுரம் சிறுமியருக்கான அரசினர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார். பின்னர் வேலூர் அன்னை சத்யா குழந்தைகள் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு தற்போது அவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலையை சேர்ந்தவர் என்றும், தான் வீட்டிலிருந்து வெளியேறிய போது தன்னை படிக்க வைப்பதாக கூறி ஒரு பெண் ஒருவர் சோளிங்கரில் இயங்கி வந்த பழனியப்பா காப்பகத்தில் சேர்த்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் காப்பகத்தை நடத்தி வந்தவர் அவரது சொந்த அண்ணன் இல்லை என்பதை கண்டறிந்த குழந்தைகள் நல குழுவினர் அங்கிருந்து அவரை சிறுமியாக மீட்டனர். ஆனால் கார்த்தி என்பவர் தனது தங்கை மல்லி என்றும் இறந்து போன சரவணன் என்பவர் அது மகள் என்றும் கூறி அவரை தன்னிடம் ஒப்படைக்குமாறு சட்டப்பணிகள் குழுவிடம் மனு அளித்திருந்தனர். சிறுமி கூறிய பெற்றோர்களுக்கும், இவர்களுக்கும் தொடர்ச்சியாக பிரச்சனையின் காரணத்தால் கடந்த 31.03.2021 அன்று சிறுமிக்கு மரபணு பரிசோதனை செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட நன்னடத்தை அலுவலரின் அறிக்கையிலும் மல்லி பிரியாவின் பெற்றோர் வந்தவாசி வட்டம் சென்னாவரம் என்ற கிராமத்தில் இருப்பதாகவும் அறிக்கை பெறப்பட்டது. சிறுமி கல்வி பயின்ற இடம் மற்றும் மரபணு சோதனை இவற்றைக் கொண்டு விசாரணை மேற்கொண்டதில் மல்லி என்கிற பிரியாவின் பெற்றோர் திருவண்ணாமலை மாவட்டம் நல்லூரில் உள்ள இருளர் காலனியில் வசித்து வருவது தெரியவந்தது.
டாஸ்மாக் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் 1 மாதத்தில் முற்றுப்புள்ளி - அமைச்சர் முத்துசாமி தகவல்
மரபணு சோதனையை கொண்டு முறையாக விசாரணை மேற்கொண்டதில் ஆறுமுகம் என்ற குள்ளன் என்றழைக்கப்படும் ஏழுமலை மற்றும் சின்ன பாப்பா என்கிற சந்திரா ஆகியோரின் மகள் என்பது தெரிய வந்தது. இதை அடுத்து இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் முன்னிலையில் சிறுமி மல்லி என்கிற பிரியாவை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
காணாமல் போன மகள் 9 ஆண்டுகள் கழித்து கிடைத்திருப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளித்து இருப்பதாக பெற்றோரும், பெற்றோரின்றி சிரமப்பட்ட தனக்கு பெற்றோர் கிடைத்து விட்டதாக மல்லியும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகிழ்ச்சி பெருக்குடன் தெரிவித்தனர். பெற்றோரை பிரிந்திருந்த மகளை அவர்களுடன் சேர்த்து வைத்த மனநிறையுடன் சென்றனர் குழந்தைகள் நலக்குழுவினர்.