தமிழ்நாட்டில் இருக்கும் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் நித்தியானந்தா. சாமியாரான இவர் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆசிரமங்கள் அமைத்து உள்ளார். பல கோடி ரூபாய்க்கு அதிபதியாக இருக்கும் இவரிடம் பல இளம்பெண்கள் சீடர்களாக இருக்கிறார்கள். இவரது ஆசிரமம் மீது தொடர்ச்சியாக குற்றசாட்டுகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அவர் மீது வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். அவ்வப்போது சில காணொளிகளை வெளியிட்டு நித்யானந்தா சர்சைககளுக்கு வித்திட்டு வருகிறார்.

இதனிடையே மீண்டும் ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தான் ஒரு பொறம்போக்கு என்றும் தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது எனவும் கூறியுள்ளார். மான அவமானங்களுக்கு தான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை என்று கூறியிருக்கும் நித்யானந்தா தனது ஆசிரமங்கள் எப்போதும் போல சிறப்பாக செயல்படுவதாக பேசியிருக்கிறார். தான் ஜாலியாக இருப்பதை பார்த்து பிறர் வயிறு எரிவதாகவும் முடிந்தால் அவர்களும் ஜாலியாக இருந்து கொள்ளட்டும் என வீடியோவில் தெரிவித்திருக்கிறார்.

மேலும் பரமசிவனும், பார்வதியும், கால பைரவரும் நேரடியாக களத்தில் இறங்கி தன்னை பாதுகாப்பதாகவும், அதனால் தன்னை எதுவும் செய்ய முடியாது என பேசியுள்ளார். இதனிடையே நித்யனந்தா கைலாசா என்கிற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாகவும் தனது சீடர்களுடன் அங்கு சென்று விட்டார் எனவும் தகவல்கள் உலா வருகின்றன. மறுபுறம் அவர் இமயமலை பகுதியில் பதுங்கி இருப்பதாகவும் செய்திகள் வருவது குறிப்பிடத்தக்கது.