'நான் உஷார் சாமி'..! பகீர் தகவலை வெளியிட்ட நித்தியானந்தா..!
தான் ஆம்பிளையா இல்லையா என்று சர்ச்சையை கிளப்பியவர்கள் தற்போது லைவில் வரும் தன்னை நித்தியானந்தாவே இல்லை என்று கூறுவதாக பேசியிருக்கிறார். இதனால் தனக்கே சந்தேகம் வந்து விட்டதாக நித்தியானந்தா கூறியிருக்கிறார்.
உலகின் பல்வேறு இடங்களிலும் ஆசிரமங்களை திறந்து பலகோடிகளுக்கு அதிபதியாக விளங்கி வருகிறார் திருவண்ணாமலையைச் நித்யானந்த சாமியார். இவரது ஆசிமத்தில் இளம்பெண்கள் பலர் சீடர்களாக இருக்கின்றனர். இதன்மூலம் பல்வேறு குற்றசாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் தற்போது அவர் எங்கிருக்கிறார் என்கிற விபரங்கள் தெரியவில்லை.
இதனிடையே காணொளி மூலமாக அவ்வப்போது பக்தர்களிடம் உரையாற்றி வருகிறார். அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் சமூக ஊடகங்களில் மீம்ஸ்களாக உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன் பேசிய காணொளியில் தமிழில் தான் எது பேசினாலும் சர்ச்சை ஆகி விடுவதாக கூறியிருந்தார். யார் என்ன செய்தாலும் நித்தியானந்தா மேல் தான் வழக்கு போடப்படுவதாகவும் இதன்காரணமாகவே தான் தமிழில் தற்போது சொற்பொழிவுகள் ஆற்றுவதில்லை என்று பேசியிருந்தார்.
இந்தநிலையில் இன்று மீண்டும் ஒரு காணொளி வெளியிட்டு இருக்கிறார். அதில் செய்தியாளர்கள் இப்போது தனக்கு பல பெயர்கள் வைத்திருப்பதாகவும் ஆனால் சிறு வயதிலேயே தனக்கு 'உஷார் சாமி' என்கிற பெயர் இருந்ததாகவும் கூறியுள்ளார். தான் ஆம்பிளையா இல்லையா என்று சர்ச்சையை கிளப்பியவர்கள் தற்போது லைவில் வரும் தன்னை நித்தியானந்தாவே இல்லை என்று கூறுவதாக பேசியிருக்கிறார். இதனால் தனக்கே சந்தேகம் வந்து விட்டதாக நித்தியானந்தா கூறியிருக்கிறார்.
மேலும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு தான் எப்படியும் வந்து விடுவேன் என்று எல்லோரும் கூறுவதாக பேசிய நித்தியானந்தா, ஆனால் தன்னால் வரமுடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் திருவண்ணாமலைக்கு வருவதா? இல்லையா? என்கிற தகவலை தற்போது தெரிவிக்க முடியாது எனவும் காணொளியில் பேசியிருக்கிறார்.