கார்த்திகை தீபத்தையொட்டி தி.மலையில் இன்று மகாதீபம் ஏற்றம்… பாதுகாப்புக்காக 13 ஆயிரம் போலீஸார் குவிப்பு!!

கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலையில் இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளதை அடுத்து 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

mahadeepam is going up in thiruvannamalai today for karthikai deepam and 13 thousand policemens are gathered for security

கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலையில் இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளதை அடுத்து 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை அடுத்து கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த கார்த்திகை தீபத்தின் முக்கிய விழாவான மகா தீபம் இன்று ஏற்றப்படுகிறது.

இதையும் படிங்க: மூதாட்டியிடம் செயின் பறித்த வட மாநில கொள்ளையர்கள்… சிசிடிவி காட்சிகளை வைத்து பிடித்த போலீஸ்!!

இதை அடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி நகருக்கு வெளியே 13 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு 58 இடங்களில் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் திரைகள் அமைக்கப்பட்டு விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி கோயில் பிரகாரங்களில் மோப்ப நாய் சோதனை, வெடி பொருட்களை கண்டறியும் சோதனையும் செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: தொழில் பேட்டை அமைக்க எதிர்ப்பு… அன்னூரில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நடைபயணம்!!

மேலும், கோயில் பிரகாரத்தில் முக்கிய பிரமுகர்களை பாதுகாப்பாக அமர வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதையொட்டி, கோயில் மடப்பள்ளியின் மீது நவீன கூடாரங்கள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு வளையம் போடப்பட்டுள்ளது. கோயிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அனைத்து நுழைவு வாயில்களிலும் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios