திருவண்ணாமலையை சேர்ந்தவர் சுரேஷ் . இவரது மனைவி அகிலா. சுரேஷின் வீட்டிற்கு அவரது சித்தப்பா மகன் ஐயப்பன் அடிக்கடி வந்து போவாராம் . சுரேஷிற்கு தேவையான உதவிகளை ஐயப்பன் செய்து கொடுத்து வந்தாராம் . ஒரு கட்டத்தில் சுரேஷ் இல்லாத நேரங்களிலும் ஐயப்பன் வர தொடங்கியுள்ளார் . அதனால் அகிலாவிற்கும் ஐயப்பனுக்கு நெருக்கம் ஏற்பட்டது . 

அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது .இதை அறிந்த சுரேஷ் , இருவரையும் கண்டித்துள்ளார் . இதனால் கடந்த மே மாதம் இருவரும் ஊரை விட்டு ஓடி உள்ளனர் .

இந்த நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு அவர்கள் மீண்டும்  ஊருக்கு வந்துள்ளனர் . அப்போது குடும்பத்தினர் இருவரையும் பிரிந்து போக கூறியதாக தெரிகிறது .

இதனால் ஒன்றாக சேர்ந்து இருவரும் தற்கொலை செய்ய முடிவெடுத்தனர் . அதன்படி ஊருக்கு ஒதுக்குப்புறம் இருக்கும் ஏரி பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர் .

இதுகுறித்து அனைகாவூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .