சாவிலும் பிரியாத ஜோடி.... கள்ளக்காதல் தெரிந்ததால் மின்கோபுரத்தில் தூக்குபோட்டு தற்கொலை..!
திருவண்ணாமலை அருகே கள்ளக்காதல் ஜோடி மின்கோபுரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அருகே கள்ளக்காதல் ஜோடி மின்கோபுரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அரையாளம் காலனி பகுதியை சேர்ந்தவர் பொன்னன் என்ற சுதாகர் (38). இவர் கூலித் தொழில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி உமா. இவர்களுக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி. பெயிண்டர். இவருடைய மனைவி தேன்மொழி (40). இவர்களுக்கு 2 மகள்கள். அதில் ஒரு மகளுக்கு திருமணமாகி விட்டது. மூர்த்தி வேலைக்காக அடிக்கடி வெளியூர்களுக்கு செல்வது வழக்கம். இதனால் சுதாகருக்கும், தேன்மொழிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இருவரும் தனிமையில் இருக்கும் போது அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர். நீண்ட காலமாகவே கள்ள உறவு இருந்துள்ள நிலையில், இவர்களது உறவு குறித்து இருவீட்டாருக்கும் தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் அவர்களது உறவினர்கள் கண்டித்துள்ளனர். அக்கம்பக்கத்தினருக்கும் தங்களது கள்ளக்காதல் பற்றி தெரிந்ததால், அவமானம் தாங்க முடியாமல் இருவருமே மனவேதனையும் வீட்டிற்குள் முடங்கினர்.
இந்நிலையில் வீட்டின் அருகே 60 அடி உயரத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மின்கோபுரத்தில் 10 அடி உயரத்தில் சுதாகர் மற்றும் தேன்மொழி ஆகியோர் தனித்தனியே இடைவெளி விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.