ஊழலற்ற இந்தியா உருவாக இளம் தலைமுறையினர் இதை செய்தால் போதும் - ஆளுநர் அறிவுரை

ஊழலற்ற இந்தியா உருவாக இளம் தலைமுறையினர் லஞ்சம் கொடுக்கவும் கூடாது, வாங்கவும் கூடாது என மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

governor rn ravi discuss with school students in tiruvannamalai

திருவண்ணாமலையில் இயங்கி வரும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வருகை தந்து பள்ளி மாணவர்களுடன் உரையாடினார். மாணவர்கள் பகவத் கீதா பற்றிய விழிப்புணர்வு, விவசாயம், ஊழலற்ற இந்தியா, தேர்வை பற்றிய பயம் மற்றும் மன அழுத்தம் வாழ்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள், சிறந்த குடிமகனாக மற்றும் அரசியல்வாதிகளாக உருவாவதற்கான வழிமுறைகளையும் கேட்டனர். 

மாணவர்களின் கேள்விகளுக்கு ஆளுநர் அவர்கள் வழங்கிய பதில் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்னும் கூற்றின்படி தான் பகவத் கீதா கற்றுக் கொண்டேன். கிருஷ்ணர் உபதேசத்தின் படி அர்ஜுனர் கடமையைச் செய்ததாகவும் மிகவும் எளிமையாக பதில் அளித்தார். மேலும் இனி வரும் காலத்தில் இந்தியாவானது உலகிற்கே உணவு வழங்கும் நாடாக விவசாயத்தில் முன்னேறும் என்று உறுதியாகத் தெரிவித்தார்.

பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டல்; மனைவி பிரசவத்திற்கு சென்ற நிலையில் இளைஞர் காம லீலை

ஊழலற்ற இந்தியா உருவாக இளம் தலைமுறையினர் லஞ்சம் கொடுக்கவும் கூடாது, வாங்கவும் கூடாது என உறுதியாக செயலாற்ற வேண்டும். படிப்பதற்கான நேரத்தை முறைப்படுத்தி சுயக் கட்டுப்பாட்டுடனும், ஆழ்ந்த கவனத்துடனும் தேர்விற்கு முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்று ஆலோசனை வழங்கினார். மேலும் மாணவர்கள் இளம் வயதிலேயே மிகப்பெரிய குறிக்கோளை மனதில் நிர்ணயம் செய்தல் வேண்டும். 

திருப்பூரில் தாருமாறாக ஓடிய தனியார் பேருந்து; 4 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்து - 2 பேர் கவலைக்கிடம்

அதாவது சிறிய விதையிலிருந்து பெரிய ஆலமரம் தோன்றுவது போல இருக்க வேண்டும். ஒரு தனிமனிதன் சிறந்த குடிமகனாக உருவாக முதலில் தன் குடும்பம் மற்றும் பள்ளியின் வாயிலாக பெறும் அறிவு, அனுபவம் ஆகியவற்றைக் கொண்டு சமுதாயத்திற்கு பாடுபட முயல வேண்டும். அதன் மூலம் அவன் ஒரு சிறந்த தலைவனாக முன்னேறலாம் என்றார். மாணவர்களுக்கு, விருதுகளை வழங்கி பாராட்டுதல்களை தெரிவித்து, பிரதமர் மோடி அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள “எக்ஸாம் வாரியர்ஸ்" என்னும் புத்தகத்தை வழங்கி ஊக்கமளித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios