ஓட்டுப்போட சென்ற இடத்தில் பெண்ணுக்கு பிரசவம்... வாக்குச்சாவடியில் நடந்த பரபரப்பு!!

வாக்களிக்க சென்ற பெண்ணுக்கு வாக்குப்பதிவு மையத்திலேயே, ஆண் குழந்தை பிறந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Girl who had a baby in Vote booth near Thiruvannamalai

வாக்களிக்க சென்ற பெண்ணுக்கு வாக்குப்பதிவு மையத்திலேயே, ஆண் குழந்தை பிறந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு, பெருந்துறைப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரகு, இவரது மனைவி நீலாவதி. கோவையில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். மக்களவை தேர்தலில் வாக்களிக்க பெருந்துறைப்பட்டுக்கு நேற்று முன்தினம் வந்தனர். 

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நீலாவதி நேற்று பிற்பகல் உறவினர்களுடன் வாக்களிப்பதற்காக, அங்குள்ள அரசு பள்ளி  வாக்குச்சாவடி மையத்திற்கு சென்றார். அப்போது, திடீரென நீலாவதிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக வாக்குப்பதிவு  செய்து விட்டு அவரை வெளியே அழைத்து வருவதற்குள் பிரசவவலி கடுமையானது. 

அப்போது, அந்த மையத்திற்கு அதே பகுதியை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் டெக்னீஷியன் விமல் என்பவர் வாக்களிக்க வந்துள்ளார். அவரது அறிவுரைப்படி கர்பிணிப் பெண் நீலாவதியின் உறவினர்கள் அங்கேயே பிரசவம் பார்த்துள்ளனர். சிறிது நேரத்தில் சுகபிரசவத்தில் நீலாவதிக்கு  அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

இதனைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக டாக்டர்கள்  தெரிவித்தனர். ஒட்டுப் போட சென்ற பெண்ணுக்கு வாக்குப்பதிவு மையத்திலேயே ஆண் குழந்தை பிறந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios