தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியது..? தீவிர சிகிச்சை பிரிவில் இளைஞர்... பீதியில் பொதுமக்கள்..!

சீனாவிலிருந்து திருவண்ணாமலை வந்த தமிழக மென்பொறியாளர் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை வ.உ.சி நகரை சேர்ந்த விமல் என்பவர் சீனாவில் மென்பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 19-ம் தேதி சீனாவிலிருந்து சென்னை வந்துள்ளார்.

Coronavirus Symptom... software engineer admitted hospital

சீனாவில் இருந்து தமிழகம் திரும்பிய பொறியாளர் ஒருவர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவின் ஹூபெய் மகாணத்தில் உள்ள வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது தீவிரம் அடைந்துள்ளது. தாய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 18 நாடுகளிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் பெரும் பீதி அடைந்துள்ளனர். இதுவரை இந்த வைரஸால் சீனாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 213-ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் அறிகுறியுடன் 9,692 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

Coronavirus Symptom... software engineer admitted hospital

இதனால், உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், சீனாவில் இருந்து கேரளா வந்த மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த மாணவியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் தொடர்ந்து தீவிரமாக மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார். 

Coronavirus Symptom... software engineer admitted hospital

இந்நிலையில் சீனாவிலிருந்து திருவண்ணாமலை வந்த தமிழக மென்பொறியாளர் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை வ.உ.சி நகரை சேர்ந்த விமல் என்பவர் சீனாவில் மென்பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 19-ம் தேதி சீனாவிலிருந்து சென்னை வந்துள்ளார்.

Coronavirus Symptom... software engineer admitted hospital

பின்னர். சென்னையிலிருந்து திருவண்ணாமலை சென்ற அவருக்கு கடந்த 2 நாட்களாக சளி மற்றும் காய்ச்சல் இருந்துள்ளது. இதனையடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று அவர், தான் சீனாவிலிருந்து வந்துள்ளதாகவும், கரோனா அறிகுறிகுறிகள் தனக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து அவரை தனி அறையில் அகுமதிக்கப்பட்டு தீவிரமாக மருத்துவர்கள் கண்ணகாணிப்பில் இருந்து வருகிறார். இதனால், தமிழக மக்கள் பீதி அடைந்துள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios