வெங்காய விலையேற்றம் நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் நிலையில், திடீரென நித்தியானந்தாவின் தனி நாடு, தனி பாஸ்போர்ட், சிஷ்யைகளுடன் லீலைகள் என்று குஜால் விவகாரங்களாக  கூடி கும்மி அடிக்கின்றன நாட்டை. இதுவரையில் தென்னிந்தியாவை மட்டுமே கலக்கி வந்த நித்தி புராணம், இந்த முறை தேசம் முழுவதுமே பற்றி எரிகிறதென்றால் அதற்கு முக்கிய காரணம் ‘தேசம் முழுவதையும் வெங்காய விலையேற்றம் போட்டு ஆட்டுவதால்தான்!’ என்கின்றனர் விமர்சகர்கள். 


இந்த பகீர் விமர்சனங்களெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் கூட நித்தியானந்தாவுக்கு எதிராக  கிளந்து எழுந்து நிற்போர், அவரைப் போட்டு புரட்டி எடுத்துக் கொண்டேதான் உள்ளனர். அந்த வகையில், நித்தியின் முன்னாள் சீடரும், அவரது ஆசிரமத்தின் முக்கிய நிர்வாகியுமான ஜனார்த்தன சர்மா இப்போது நித்தியை பின்னிப் பேர்த்து எடுக்கிறார். காரணம், நித்தியின் கட்டுப்பாட்டில் இருக்கும் இரண்டு முக்கிய இளம் பெண்களில் இவரது மகள்கள் இருவரும் அடக்கம். ஜனார்த்தன சர்மா இப்போது ஒரு பேட்டியில்...”நித்தியானந்தா எங்கே இருக்கிறார் அப்படின்னு தெரிஞ்ச ஒரு பத்து பேர் இன்னும் ஆசிரமத்துக்குள்ளேதான் சுத்திட்டு இருக்கானுங்க. அவங்களை வகையா விசாரிச்சால், உண்மை தெரிஞ்சுடும். இந்துக்களுக்கு தனி நாடுன்னு திடீர்ன்னு அவன் சொல்றான்னா (நித்திதான்) அதுக்கு என்ன காரணம்? அதை புரிஞ்சுக்கணும். இதையெல்லாம் நாங்க அங்கே இருக்கும்போதே போட்ட்ட ஸ்ட்ராட்டஜீஸ். 


நித்தியானந்தாவின் ஆசிரமத்துக்குள்ளே மிக தவறான வழியில் சிறுமிகளை நடத்துறாங்க. பெண்கள் கையில் பெங்களூரு ரோஸ் பூவை கொடுத்து,  லைட்டை அணைக்க வெச்சுட்டு என்னவெல்லாமோ பண்றாங்க. உள்ளே இருக்கிற பெண்களுக்கு ஆபாச படங்களை நித்தியானந்தாவே அனுப்புவார். ஆண்களை,  ஆண் சீடர்களை கூட சல்லாபத்துக்கு அவர் கூப்பிட்டிருக்கார், இது ஆதாரப்பூர்வமா உறுதியாகியிருக்குது. பாதிக்கப்பட்ட பையனே சொல்லியிருக்கான்.” என்று விளாசி தள்ளியிருக்கிறார். 


தனக்கு எதிராக இந்த தேசத்தில் பெரும் ‘பலான குற்றச்சாட்டு’ புயல் கிளம்பியிருக்கும் நிலையிலும், ஏதோ கடற்பரப்பில் உட்கார்ந்து கொண்டு கெக்கே பிக்கேன்னு சிரிச்சுகிட்டு ‘என்னை பார்த்தால் உனக்கு ஏன் வயிறு எரியுது? எனக்கு கூந்தல் இருக்குது, அள்ளி முடியுறேன்’ என்று லாஜிக்கலாக லந்து பேசிக் கொண்டிருக்கிறார். 
ஹும்! கொடுத்து வச்சவரு.