Asianet News TamilAsianet News Tamil

சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை... பக்தர்கள் அதிர்ச்சி... வரலாற்றை மாற்றும் கொரோனா..!

சித்ரா பவுர்ணமியான வரும் மே 6ம் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு  செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Chitra Pournami Girivalam ban
Author
Thiruvannamalai, First Published Apr 28, 2020, 6:13 PM IST

சித்ரா பவுர்ணமியான வரும் மே 6ம் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு  செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா தொற்றை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை, 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, 10 பேர் குணமடைந்துள்ளனர். ஊரடங்கால், மார்ச், 24 முதல், அருணாசலேஸ்வரர் கோவில் மூடப்பட்டு, ஏப்ரல் மாத பவுர்ணமி கிரிவலத்துக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

Chitra Pournami Girivalam ban

இந்நிலையில், ஆண்டு தோறும் சித்திரை மாத பவுர்ணமி மிகவும் விசேஷமானது. இதனால், அன்று திருவண்ணாமலையில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். அதன்படி இந்தாண்டும் சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் மே 6ம் தேதி இரவு 7.01 மணிக்கு தொடங்கி 7ம் தேதி மாலை 5.51 மணிக்கு நிறைவடைகிறது.  ஆனால், கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால், அதன்பிறகு ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு உள்ளதாக  கூறப்படுகிறது. 

Chitra Pournami Girivalam ban

எனவே வரும் மே 3ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்வு அளிக்கப்பட்டலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி அன்று கூடுவார்கள் என்பதால் தடை விதிப்பது என மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால், சித்ரா பவுர்ணமி கிரிவலமும் ரத்து செய்யப்படுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.

Chitra Pournami Girivalam ban

அதே நேரத்தில் அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு நடைபெறும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் உள்ளிட்டவை வழக்கம்போல் நடைபெறும். ஆனால், பக்தர்கள் கோயிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதி அளிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios