ஃபிரிட்ஜில் வைத்த பிரியாணி சாப்பிட்ட 7 மாத கர்ப்பிணி உயிரிழப்பு..!

வந்தவாசி அருகே பழைய பிரியாணியை சாப்பிட்ட கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

briyani eating Pregnant woman dead

வந்தவாசி அருகே பழைய பிரியாணியை சாப்பிட்ட கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வந்தவாசி அடுத்த மேல்பாதிரி கிராமத்தை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவரது மனைவி உமா (30). இவர்களுக்கு ராகுல் (2) என்ற ஆண் குழந்தை உள்ளது. உமா தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் பகல் உமா பிரியாணி செய்து சாப்பிட்டார். மீதம் இருந்த பிரியாணியை உமா குளிர்சாதனப் பெட்டியில் வைத்துட்டார். briyani eating Pregnant woman dead

இந்நிலையில் மறுநாள் காலை குளிர்சாதனப்பெட்டியில் இருந்த பிரியாணியை மீண்டும் சுட வைத்து உமா சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் உமாவுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனே மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். briyani eating Pregnant woman dead

ஆனால் சிகிச்சை பலனின்றி 7 மாத கர்ப்பிணி உமா பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியாணி சாப்பிட்டு கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல கடந்த மாதம் பழைய பிரியாணியை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சாப்பிட்ட சிறுமி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.  

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios