திருவண்ணாமலையில் இன்று மகா தீபம்..! லட்சக்கணக்கில் திரளும் பக்தர்கள்..!
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு இன்று அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில். உலகப்பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு தினமும் பெருமளவில் பக்தர்கள் வருகை தருவார்கள். கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். இந்த வருடத்திற்கான திருவிழா கடந்த கடந்த 1ம் தேதி தொடங்கியது.
10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கார்த்திகை தீபத்திருநாள் இன்று நடக்கிறது. மாலை 6 மணியளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதை காணபதற்கு கடந்த இரண்டு நாட்களாக திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனிடையே இன்று அதிகாலை 4 மணியளவில் கோவில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
முதலில் ஒரு தீபத்தில் இருந்து ஐந்து தீபங்கள் ஏற்றப்பட்டு, பின் அவற்றில் இருந்து ஒரே தீபமாக பரணி தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக கார்த்திகை தீப திருவிழாவிற்காக அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 2600 சிறப்பு பேருந்துகளும் 22 சிறப்பு ரயில் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. சுமார் 8000 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்னர்