ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரும் பலி !! வரன் பார்க்க சென்ற நேரத்தில் நிகழ்ந்த கொடூரம் ..
திருவண்ணாமலை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் உடல் நசுங்கி பலியாயினர்.
பெங்களூர் கோரமங்களா நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் . இவரது மனைவி சந்திரா இவருக்கு ஒரு மகள் , இரண்டு மகன்கள் .5 பேரும், பெண் பார்ப்பதற்காக காரில் திருவண்ணாமலைக்கு வந்துகொண்டிருந்தனர். அவர்கள் செங்கம் அடுத்த அய்யம்பாளையம் அருகே வந்தபோது, காருக்கு முன்னே சென்ற வாகனத்தை முந்தியுள்ளனர்.
அப்போது எதிரே வேகமாக லாரி ஒன்று வந்துள்ளது . கண்ணிமைக்கும் நேரத்தில் காரும் லாரியும் மோதிக்கொண்டன . காரில் பயணம் செய்த 5 பெரும் உடல் நசுங்கி பலியாயினர் . அவர்களது உடல் பிரேதப் பரிசோதனைக்காகத் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந்த விபத்து குறித்து திருவண்ணாமலை காவல் துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
பெண் பார்க்கச் சென்றவர்களுக்கு நடந்த இந்தக் கோர விபத்து உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.