திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகளவில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக புகார்கள் வந்தது. இங்கிருக்கும் தண்டராம்பட்டு ஒன்றியம் ஆண்டாபட்டு கிராமத்தில் தொடர்ந்து குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக தகவல் வரவே கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 வயது நிறைவடையாத பெண்களுக்கு குழந்தை திருமணம் செய்து வைக்கும் பட்சத்தில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்படும் என ஆட்சியர் கந்தசாமி எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 18 வயது பூர்த்தியடையாத பெண்ணுக்கோ, 21 வயது பூர்த்தியடையாத ஆணுக்கோ திருமணம் செய்து வைத்ததால் அவர்களது கல்வி தடைபட்டு எதிர்காலத்தில் சமுதாயத்தில் பல்வேறு பிரச்னைகளை அவர்கள் சந்திக்க நேரிடும். முக்கியமாக பெண் குழந்தைகளின் வளர்ச்சி ஒட்டுமொத்தமாக தடைபடும். எனவே, குழந்தைத் திருமணம் செய்வது அல்லது குழந்தைத் திருமண ஏற்பாட்டில் பங்கு பெறுவது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு செய்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளது. 

மன் கி பாத்தில் ஒலித்த 'அவ்வையார்' பாடல்..! மீண்டும் தமிழை பெருமைபடுத்திய பிரதமர் மோடி..!

thiruvannamalai_collector

அதன்படி, இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும். யாராவது குழந்தைகளுக்கு திருமண ஏற்பாடு செய்தால்  இலவச உதவி எண்களான 1098, 181 மற்றும் 04175-238181, 04715 233810 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். இவ்வாறு ஆட்சியர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.