ஒருவழிப்பாதையில் அசுர வேகம்; சாலை விதியை மதிக்காததால் நொடியில் பிரிந்த இளைஞரின் உயிர்

திருப்பூரில் ஒருவழிப் பாதையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர் சாலையின் தடுப்புச் சுவற்றில் மோடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

young man killed road accident at tirupur district vel

திருப்பூர் வீரபாண்டி ஜேஜே நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜா. கட்டிட கூலி  தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், வேலைக்கு  செல்வற்காக நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து வீரபாண்டி பிரிவு அருகே ஒரு வழி பாதையில்  அதிவேகமாகவும், விதிமுறைகளை மீறியும் சென்றதாகக் கூறப்படுகிறது. 

கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த கும்பல்; விசாரணையில் அடுத்தடுத்து வெளிவந்த உண்மைகள்

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையின் நடவே அமைக்கப்பட்டிருந்து தடுப்பு சுவரில் அதிவேகமாக மோதி உள்ளது. இதில் ராஜாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு  ரத்த வெள்ளத்தில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

ராதிகாவுக்கு மட்டுமல்ல, விருதுநகரில் ஒவ்வொரு தாய்க்கும் நான் மகன் தான்; கேப்பில் ஸ்கோர் செய்யும் விஜயபிரபாகரன்

இதையடுத்து  அப்பகுதியினர் அளித்த தகவலின் அடிப்படையில் வீரபாண்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios