பேருந்தை வழிமறித்த படையப்பா காட்டு யானை.. கூலாக ஹாண்டில் செய்த பேருந்து ஓட்டுநர்.. அப்படி என்ன செய்தார்?
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மூணாறு சாலையில் படையப்பா என பெயர் சூட்டப்பட்ட காட்டு யானை கடந்த சில நாட்களாக மூணார் தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால், அப்பகுதியை நெருங்கும் போது வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
உடுமலை மூணாறு சாலையில் கேரள அரசு பேருந்தை வழிமறித்த படையப்பா காட்டு யானை கண்ணாடியை தாக்கிவிட்டு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
காட்டு யானைகள் அட்டகாசம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மூணாறு சாலையில் படையப்பா என பெயர் சூட்டப்பட்ட காட்டு யானை கடந்த சில நாட்களாக மூணார் தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால், அப்பகுதியை நெருங்கும் போது வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
பேருந்து வழிமறிப்பு
இந்நிலையில் உடுமலைப்பேட்டையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மூணாறு நோக்கி கேரள அரசு பேருந்து சென்றிக்கொண்டிருந்தது. அப்போது, பேருந்தை வழிமறித்த படையப்பா காட்டு யானை முன்பக்க கண்ணாடியை தந்தத்தால் முட்டி தாக்கியது.
வீடியோ வைரல்
ஆனால், ஓட்டுனர் சிறிதும் அச்சப்படாமல் சாதுர்யமாக பேருந்தை இயக்காமல் அப்படியே நின்றார். இதனையடுத்து, சிறிது நேரத்தில் படையப்பா யானை சென்றுவிட்டது. இதனை பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் நடத்துனர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.