Asianet News TamilAsianet News Tamil

இருசக்கரம் மீது சரக்கு வாகனம் பயங்கர மோதல்.. தூக்கி வீசப்பட்ட 4 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து காய்கறிகள் ஏற்றிக்கொண்டு கோவைக்கு இன்று அதிகாலை சரக்கு வேன் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது.பல்லடம் அருகே புத்தரச்சல் பகுதியில் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக சாலையில் ஓடியது.  பின்னர், எதிரே வந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. 
 

Van Bike accident.. 4 members of the same family dead
Author
Thirupur, First Published Mar 8, 2022, 12:47 PM IST

திருப்பூர் அருகே இருசக்கரம் மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து காய்கறிகள் ஏற்றிக்கொண்டு கோவைக்கு இன்று அதிகாலை சரக்கு வேன் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. பல்லடம் அருகே புத்தரச்சல் பகுதியில் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக சாலையில் ஓடியது. பின்னர், எதிரே வந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. 

Van Bike accident.. 4 members of the same family dead

வாகனம் விபத்து

இதில் 2  இருசக்கர வாகனங்களில் வந்த குழந்தை உள்பட 5 பேர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் முருகானந்தம் அங்கிருந்து தப்பியோடி விட்டார். உடனே அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த 5 பேரை ஆம்புலன்சில் அழைத்து சென்றனர். இதில், 4 பேர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

Van Bike accident.. 4 members of the same family dead

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

விபத்தில் உயிரிழந்த குழந்தை உள்பட 4 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில்  உயிரிழந்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி சேர்ந்தவர்களும் என்பதும் கோவையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த அப்பகுதி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பித்துயோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios