விஷவாயு தாக்கி 4 இளைஞர்கள் பரிதாப உயிரிழப்பு..!

திருப்பூர் அருகே தனியார் தொழிற்சாலையில் உள்ள தொட்டியை சுத்தம் செய்யும் போது, விஷவாயு தாக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

toxic gas...killed 4 people

திருப்பூர் அருகே தனியார் தொழிற்சாலையில் உள்ள தொட்டியை சுத்தம் செய்யும் போது, விஷவாயு தாக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

திருப்பூர் மாவட்டம் கருப்ப கவுண்டம்பாளையம் பகுதியில் தனியார் சாய ஆலை இயங்கி வருகிறது. இந்நிலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்றது. இந்த பணியில் வட மாநில இளைஞர்கள் 5 பேர் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். toxic gas...killed 4 people

அப்போது, திடீரென விஷவாயு தாக்கியதில் பணியில் இருந்த உசேன், ஃபரூக் அகமது, அன்வர் உசேன், அபு ஆகிய வடமாநில இளைஞர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இறந்தவர்கள் உலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். toxic gas...killed 4 people

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பாதுகாப்பு உபகரணங்கள் போடாமல் தொட்டி சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கியதாக போலீசார் கூறியுள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios