கடவுளே இதுமாதிரி கொடுமை யாருக்கும் வரக்கூடாது.. வேதனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை.!

பராமரிக்க ஆள் இல்லாததால் ஒரே குடும்பத்தில் தாய், மகன், மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tirupur same family suicide...police investigation

பராமரிக்க ஆள் இல்லாததால் ஒரே குடும்பத்தில் தாய், மகன், மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ராகவன் (50), பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி செல்வி (47). இவர்களுக்கு அஸ்வின் (19) என்ற மகனும், அகல்யா(17) என்ற மகளும் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 4 பேரும் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிறிய காயங்களுடன் ராகவன் உயிர் தப்பினார். ஆனால், செல்வி, அகல்யாவுக்கு ஒரு கை துண்டானது. அஸ்வினுக்கு கால் துண்டானது. 

Tirupur same family suicide...police investigation

இவர்கள் அனைவரையும்   தந்தை ராகவன் பார்த்து வந்தார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு ராகவன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து, செல்வி, அஸ்வின், அகல்யா ஆகியோரை பராமரிக்க ஆள் இல்லாமல் தவித்து வந்தனர். இதனால், மனவேதனையில் இருந்த 3 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.  இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

Tirupur same family suicide...police investigation

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் 3 பேரின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios