தேர்தல் நடத்தை விதிமுறையால் பல தொழில்கள் தமிழகத்தில் சரிவடைந்திருக்கிறது. அதில் முக்கியமாக பாதிப்படைந்தது திருப்பூர் பின்னாலடை ஆலைகள். ஆர்டர் கொடுப்பதிலிருந்து கொடுத்த ஆர்டரை திருப்பி வாங்கும் வரை பின்னாலடை முதலாளிகள் பல நஷ்டத்தை தேர்தல் நடத்தை விதிமுறையின் மூலமாக அனுபவித்து வந்தது. 

தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை அகற்றப்பட இருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் திருப்பூர் வாசிகள்.  கடந்த மார்ச் 10ல், லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது அன்று முதல், தேர்தல் நன்னடத்தை விதிகளும் அமலுக்குவந்தன.

உரிய ஆவணம் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட பணத்தை, பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்; வங்கி கணக்குகளும், கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன. கெடுபிடிகளுக்கு பயந்து, வெளிமாநில வர்த்தகர்கள், திருப்பூர் நிறுவனங்களுக்கு ஆடைக்கான முழு தொகையை வழங்க தயங்கினர். மொத்த தொகையில், ஒருபகுதியை மட்டும் வழங்கிவிட்டு, தேர்தலுக்குப்பின் மீத தொகையை தருவதாக கூறிவிட்டனர்.

ஆடைக்கான தொகை கிடைக்காமல், சிறு, குறு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துவருகின்றன. வேறுவழியின்றி, சில ஆயத்த ஆடை நிறுவனங்கள், ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கான கட்டணத்தை வழங்குவதில் காலம் தாழ்த்திவருகின்றன.நேரடியாக திருப்பூர் வந்து, ஆடை கொள்முதல் செய்து கொண்டுசெல்வதையும், வர்த்தகர்கள் நிறுத்திவிட்டனர். 

நிதி தட்டுப்பாடு மட்டுமின்றி, கோடை கால ஆடை வர்த்தகமும் பாதித்தது, பின்னலாடை துறையினரை கவலை அடையச் செய்தது.நேற்று முன்தினம், ஓட்டு எண்ணிக்கை நடந்தது. மத்தியில், பா.ஜ., ஆட்சி அமைக்க உள்ளது. தேர்தல் முடிந்தநிலையில், வரும் 27ம் தேதி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபசாகிறது. இது, ஆடை உற்பத்தி துறையினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது