ஆம்னி வேன் - டெம்போ நேருக்கு நேர் மோதல்... 3 பேர் உயிரிழப்பு..!

பொள்ளாச்சி அருகே ஆம்னி வேனும் மினி டெம்போவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

road accident... 3 people kills

பொள்ளாச்சி அருகே ஆம்னி வேனும் மினி டெம்போவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர்கள் சம்பத் குமார் - கமலம் பேபி தம்பதி. இவர்கள் கமலம் பேபியின் சகோதரியான ஜோதியின் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவை அடுத்து அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக ஆம்னி வேன் ஒன்றில் கோவைக்கு சென்று கொண்டிருந்தனர். ஆம்னி வேனை வேலுச்சாமி என்பவர் ஓட்டிச் சென்றார். road accident... 3 people kills

அப்போது, வேன் பொள்ளாச்சியை அடுத்த உடுமலை அருகே வந்துக்கொண்டிருந்த போது திடீரென எதிரே வந்த மினி டெம்போ மீது ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பத்குமார், வேலுச்சாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கமலம்பேபி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜோதி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். road accident... 3 people kills

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios