தமிழகத்தில் அதிகம் பேசப்படும் கட்சி பாஜக.. அண்ணாமலைக்கு வாழ்த்து.. கொங்கு மண்டலத்தை அதிர வைத்த மோடி
2024-ல் தமிழ்நாட்டில் அதிகமாக பேசப்படும் கட்சி பாஜக. தமிழ்நாட்டின் இளைய தலைவர் அண்ணாமலைக்கு எனது வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி அண்ணாமலையை வாழ்த்தி பேசியுள்ளார்.
2 நாட்கள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார். பல்லடம் மாதப்பூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் இன்று மாலை மதுரையில் சிறு, குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்கத் திட்ட கருத்தரங்கில் பங்கேற்கிறார். நாளை தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். மேலும் நாளை பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
பிரதமர் மோடி தமிழகம் வருவதையொட்டி நிலையில் மதுரையில் ட்ரோன்களை இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்லடம் வந்தடைந்த பிரதமர் மோடி, திறந்தவெளி வாகனத்தில் இருந்தவாரு பொதுமக்களை நோக்கி கையசைத்தார். அந்த திறந்தவெளி வாகனத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிறகு பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, “வணக்கம் என தமிழில் பேசிய பிரதமர் மோடி, 2024-ல் தமிழ்நாட்டில் அதிகமாக பேசப்படும் கட்சி பாஜக. தமிழ்நாட்டின் இளைய தலைவர் அண்ணாமலைக்கு எனது வாழ்த்துகள். தமிழ்நாட்டுடனான எனது தொடர்பு அரசியல் சார்ந்தது அல்ல, அது இதயப்பூர்வமானது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "என் மண் என் மக்கள் யாத்திரை தமிழ்நாட்டை புதிய பாதையில் எடுத்துச் செல்கிறது.
தமிழ்நாட்டில் கொங்கு மண்டலம் தான் தொழில் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. பாஜக தொண்டர்கள் கூட்டத்தைப் பார்க்கும் போது காவிக்கடலை பார்ப்பது போல் உள்ளது. தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்கும் மாநிலம் என்பது இந்தக் கூட்டத்தின் மூலம் நிரூபணம் ஆகிறது” என்று பேசினார்.
உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் 10000 ரூபாய் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?