பல்லடம் அருகே விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிய சொகுசு கார்.. கல்லூரி மாணவர்கள் 6 பேருக்கு என்ன ஆச்சு?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோடங்கிபாளையம் பிரிவு அருகே இன்று அதிகாலை சாலையோரம் நின்ற வாகனத்தின் பின்புறம் சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானது.
பல்லடம் அருகே கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டு இருந்த வாகனத்தின் மீது சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் 6 பேர் படுகாயமடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோடங்கிபாளையம் பிரிவு அருகே இன்று அதிகாலை சாலையோரம் நின்ற வாகனத்தின் பின்புறம் சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கண்ட பொதுமக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தில் படுகாயமடைந்த 6 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: அடுத்த 3 மணிநேரத்தில் இந்த டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டப்போகுதாம்.. வானிலை மையம் அலர்ட் மெசேஜ்!
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இந்த விபத்தினை பார்த்த பொதுமக்கள் உடனடியாக பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனை மற்றும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சென்றவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: Today Gold Rate in Chennai: தகி தகிக்கும் தங்கம்! இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? நிலவரம் இதோ.!
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சொகுசு காரில் வந்தது கோவை தனியார் கல்லூரியில் பயின்று வரும் சங்கீதன் (22), மணிகண்டன்(19), குமரன்(20) உள்ளிட்ட 6 மாணவர்கள் என்பது தெரியவந்தது. இந்த விபத்தினால் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து கிரேன் மூலம் போலீசார் விபத்தில் சிக்கிய வாகனத்தை அப்புறப்படுத்தினர்.