சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் அதிரடி கைது; திருப்பூர் போலீஸ் அதிரடி

16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த நபரிடம் சமரசம் செய்வதாகக் கூறி பணம் பறித்து தலைமறைவாக இருந்த நபரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

one man arrested who involved child rape case in tirupur district vel

திருப்பூர் மாவட்டம், மூலனுார், எரகாம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 65) விவசாயி. இவர் 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ராஜேந்திரன், தாராபுரம் அரசு மருத்துவமனையில் தலைமை நர்சாக உள்ள உஷாராணி (52) என்பவரை அணுகி, சிறுமியின் கருவை கலைக்கச் செய்துள்ளார். 

ஒரே வார்த்தையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இமேஜை மொத்தமாக காலி செய்த செல்லூர் ராஜூ

மேலும் இது தொடர்பாக வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும், சிறுமியை ராஜேந்திரன் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த, மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட சிறுமி, தாராபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 'போக்சோ' பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ராஜேந்திரன், உஷாராணியை தாராபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

தூத்துக்குடியில் 7 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொடூரக்கொலை; போலீஸ் விசாரணை

இந்த நிலையில் ராஜேந்திரனுக்கு உடந்தையாக இருந்த சரவணன் என்பவர் குழந்தைகளின் பெற்றோருக்கு கொடுப்பதாக கூறி ராஜேந்திரனிடம் பேரம் பேசி ரூ.13 லட்சம்  பணத்தை அபகரித்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய இவரை போலீசார் தேடி வந்தனர். தாராபுரம் காவல் நிலைய பகுதியில் ஒரு வீட்டில் மறைந்திருந்த சரவணனை பிடித்த போலீசார் அவர் மீது பண மோசடி மற்றும் வன்கொடுமை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios