எனக்கு 60 வயசு ஆச்சு! ரோட்ல இறங்கிலா போராட முடியாது! திட்டங்களை நிறைவேத்துங்க!ஆ.ராசாவிடம் முதியவர் வாக்குவாதம்
நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவிநாசி பகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ஒரு நாள் சுற்றுப்பயணமாக திமுக எம்.பி. ஆ.ராசா கலந்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு மகளிர் உரிமை தொகை இன்னும் வரவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவிநாசி பகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ஒரு நாள் சுற்றுப்பயணமாக திமுக எம்.பி. ஆ.ராசா கலந்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து அவினாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட மடத்து பாளையம் ஊராட்சி மாரப்பன் பாளையம் பகுதியில் உள்ள ஏடி காலணியில் குடிநீர் மேல்நிலை தொட்டியினை பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார். அப்போது அந்த பகுதி மக்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டு எங்கள் பகுதியில் உள்ள அனைத்து மகளிருக்கும் 1000 ரூபாய் உரிமை தொகை இன்னும் வரவில்லை. இங்கு ரோடு வசதி குடிநீர் வசதி வடிகால் வசதி போன்றவை இல்லாமல் பல ஆண்டு காலமாக நாங்கள் வசித்து வருகிறோம் என வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்
மேலும் அப்பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்ற விவசாயி ஒருவர் விவசாயிகளுக்கு சேர வேண்டிய பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. வீதியில் இறங்கி போராடுவதற்கு எனக்கு வயது 79 ஆகிவிட்டது உங்களுக்கு வயது என்ன நீங்கள் ஏன் செய்து தர மறுக்கிறீர்கள். உடனடியாக அனைத்து திட்டங்களும் விவசாயிகளுக்கு வந்து சேருமாறு செய்ய வேண்டும் என ஆ.ராசா சென்ற காரை வழிமறித்து கேள்விகளை எழுப்பினார். அதற்கு ஆ.ராசா செய்து தருகிறேன் செய்து தருகிறேன் என கூறிவிட்டு அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பினார்.