பணம் இருந்தும் நிம்மதி இல்லை... தொழிலதிபர் மனைவியுடன் ரயில் முன்பாய்ந்து தற்கொலை..!
திருப்பூரில் தொழிலதிபர் ஒருவர் தன் மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் தொழிலதிபர் ஒருவர் தன் மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூா் மாவட்ட தாராபுரத்தைச் சோ்ந்தவா் தங்கமுத்து (63), இவரது மனைவி ராதாமணி (58), தங்கமுத்துவுக்கு தாராபுரத்தில் சொந்தமாக நிதி நிறுவனமும், தங்கும் விடுதிகளும், வணிக வளாகங்களும் உள்ளன. இந்நிலையில், கணவன், மனைவி இருவரும் கடந்த புதன்கிழமை இரவு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனா். இதன் பிறகு இருவரும் வீடு திரும்பவில்லை.
இதனிடையே, திருப்பூரை அடுத்த வஞ்சிபாளையம் அருகே இவா்களது கார் நின்றுள்ளது. இதன் பிறகு சிறிது தொலைவில் உள்ள ரயில்வே தண்டவளாதத்தில் இருவரது சடலம் கிடப்பதை அந்த வழியாகச் சென்றவர்கள் வியாழக்கிழமை அதிகாலையில் பாா்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனே ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரது சடலத்தையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதன் பிறகு போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கோவையில் இருந்து திருப்பூா் நோக்கிச் சென்ற ரயில் முன் பாய்ந்து தம்பதி இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும், அவர்களது தற்கொலைக்கு குடும்ப பிரச்சனையே காரணம் என்று கூறப்படுகிறது.