Asianet News TamilAsianet News Tamil

இன்ஸ்டா காதல்.. தாயின் 7 சவரன் நகையுடன் எஸ்கேப்.. 17 வயது காதலனுக்கு ஐபோன் வாங்கி கொடுத்த 15 வயது சிறுமி!

திருப்பூரை சேர்ந்த 15 வயது சிறுமி மற்றும் 17 சிறுவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது.

Instagram Love.. 15-year-old girl buys iPhone for 17-year-old boyfriend tvk
Author
First Published Jun 13, 2024, 2:36 PM IST

17 வயது சிறுவனை இன்ஸ்டாவில் காதலித்த 15 வயது சிறுமி தாயின் நகைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

திருப்பூரை சேர்ந்த 15 வயது சிறுமி மற்றும் 17 சிறுவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் 17 வயது சிறுவன் தன்னிடம் சிறிய அளவிலான செல்போன் தான் உள்ளதால்  ஐபோன் வாங்கி தரும்படி சிறுமியிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி வீட்டிலிருந்த  தனது தாயின் 7 சவரன் நகையை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 

இதையும் படிங்க: கொலை வெறியில் அண்ணனை தேடி வந்த கும்பல்! சிக்கிய தம்பியை சின்னா பின்னமாக்கிய கொடூரம்.. சென்னையில் பயங்கரம்!

பின்னர் அந்த நகையை விற்று அதில் கிடைத்த பணத்தின் மூலம் இருவரும் ஐபோன் வாங்கியுள்ளனர்.  இருவரும் திருப்பூரில் பல்வேறு இடங்களில் சுற்றியுள்ளனர். இதனிடையே வீட்டில் இருந்த நகை மற்றும் மகளை காணவில்லை என்பதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

இதையும் படிங்க:  கேப் கிடைக்கும் போதெல்லாம் மருமகனுடன் உல்லாசம்! எவ்வளவு சொல்லியும் கேட்காத மனைவி! இறுதியில் நடந்தது என்ன?

பின்னர் சிறுமியையும் சிறுவனையும் போலீசார் கண்டுபிடித்தனர். இருவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios