Asianet News TamilAsianet News Tamil

அளவுக்கு அதிகமாக கடன் வாங்கிய மகன்; வாழ்க்கையை முடித்துக் கொண்ட பெற்றோர்

திருப்பூரில் மகன் ஏராளமான கடன் வாங்கியதால் மனமுடைந்த தாய் தந்தை இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Frustrated parents committed suicide after son took too much credit
Author
First Published Jun 28, 2023, 10:53 AM IST

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் நீதியம்மாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அலெக்சாண்டர் - அமலோற்ப மேரி தம்பதியர். இவர்களது மகன் சார்லஸ் பனியன் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகவும், தொடர்ந்து தொழிலை நடத்துவதற்காகவும் பல்வேறு இடங்களில் 15 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார்.

கடன் கொடுத்தவர்கள் சார்லஸிடம் பணம் கேட்க அவர் வீரபாண்டி பகுதியில் குடியேறியுள்ளார். இதனால் பணம் கொடுத்தவர்கள் சார்லசின் தந்தை அலெக்சாண்டரிடம் பணம் கேட்டு வற்புறுத்தி வந்ததால் மணமுடைந்த அவர் தனது  மனைவியுடன் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். 

சென்னையில் சிக்னல் கொடுத்தும் நிற்காமல் சென்ற ரயில்; பயணிகள் ஆவேசம்

கணவன் மனைவி இருவரும் நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கதினர்‌ சென்று பார்த்த போது இருவரும் மயங்கிய நிலையில் இருந்தது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் வடக்கு காவல் துறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வளையோசை கல கல வென - மேடையில் பாடல் பாடி அசத்திய எம்.எல்.ஏ செந்தில்குமார்
 

Follow Us:
Download App:
  • android
  • ios